கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட 111 வயதான சாமியார்
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட 111 வயதான சாமியார் சிவக்குமார் சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் ஸ்ரீ சித்தகங்கா மடத்தை சேர்ந்தவர் சாமியார் சிவக்குமார். 111 வயதான இவர் கடந்த சில தினங்களாக கல்லீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சிவகுமார் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பெங்களூருவில் இருந்து ஏர்-ஆம்புலன்ஸ் முலம் அழைத்து வரப்பட்ட அவர், குரோம்பேட்டை மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்போடு அழைத்து செல்லப்பட்டார்.
Next Story