52 நவீன வசதி பேருந்துகளில் கட்டணம் குறைப்பு : அரசு விரைவு போக்குவரத்து கழகம்

குளிர் சாதன படுக்கை வசதி பேருந்துகள், கழிவறை வசதி மற்றும் படுக்கை வசதி பேருந்துகளில் இனிமேல் திங்கள் முதல் வியாழன் வரை பயணம் செய்ய 10 சதவீதம் அளவுக்கு கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.
52 நவீன வசதி பேருந்துகளில் கட்டணம் குறைப்பு : அரசு விரைவு போக்குவரத்து கழகம்
x
குளிர் சாதன படுக்கை வசதி பேருந்துகள், கழிவறை வசதி மற்றும் படுக்கை வசதி பேருந்துகளில் இனிமேல் திங்கள் முதல் வியாழன் வரை பயணம் செய்ய 10 சதவீதம் அளவுக்கு கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இயக்கப்படும் 52 பேருந்துகளில் இந்த கட்டணக் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து திருச்சி செல்ல திங்கள் முதல் வியாழன் வரை 635 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், மதுரைக்கு 880 ரூபாயும், பெங்களூருவுக்கு 700 ரூபாயும் வசூலிக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம்  தெரிவித்துள்ளது,. வெள்ளி, சனி, ஞாயிரு மற்றும் பண்டிகை காலங்களில் கட்டண சலுகை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கட்டணம் அதிகமாக இருப்பதால் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் குறைவாக இருப்பதால் கட்டண குறைப்பு என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்