எய்ம்ஸ் மருத்துவமனை அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த 45-வது மாதத்தில் செயல்படும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
பதிவு : டிசம்பர் 06, 2018, 05:33 PM
மத்திய அமைச்சரவை ஒப்​புதல் கிடைத்த 45-வது மாதம், மதுரை தோப்பூரில் எய்ம்​ஸ் மருத்துவமனை செயல்பட தொடங்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான அனுமதியை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட உத்தரவிடக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது மத்திய சுகாதாரத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  டெல்லியில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற மத்திய நிதிக் குழுக் கூட்டத்தில் பரிசீலனைக்காக திட்ட அறிக்கை வைக்கப்பட்டு உள்ளது என்றும், நிதிக்குழு பரிந்துரையை தொடர்ந்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த 45-வது மாதத்தில் தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.