மேகதாது விவகாரம் : கர்நாடக அரசு மற்றும் மத்திய நீர்வள ஆணையம் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
பதிவு : டிசம்பர் 06, 2018, 01:03 PM
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு மற்றும் மத்திய நீர்வள ஆணையம் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடக அரசு மற்றும் மத்திய நீர்வள ஆணையம் ஆகியவை காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக செயல்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மத்திய நீர்வள ஆணையம் முன்பு தவறான தகவல்களை அளித்து இந்த அனுமதியை கர்நாடக அரசு பெற்று உள்ளதாகவும் அந்த மனுவில் தமிழகம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மத்திய நீர்வள ஆணையம் அனுமதி தந்துள்ளதாகவும் அதில் தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது. 

காவிரியின் கடைமடை மாநிலமான தமிழகத்தின் இசைவு பெறாமல் கர்நாடக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மனுவில் தமிழகம் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர், கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன், உறுப்பினர் முகர்ஜி ஆகியோரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்றும், எதிர்க்காலத்தில் இதுபோன்ற ஒரு நடவடிக்கையில் கர்நாடகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் மேற்கொள்ளாமல் இருக்க தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தமிழகம் கோரியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

338 views

பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

999 views

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.

464 views

பிற செய்திகள்

எய்ம்ஸ்: "தென்மாநில வளர்ச்சிக்கு பரிசு" - ரவிசங்கர் பிரசாத்

தமிழகத்தில் மதுரை, தெலங்கானாவில் பி.பி.நகர் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர மத்திய அரசு செய்துள்ள முடிவு தென்மாநிலங்களின் வளர்ச்சிக்கு அளித்த பரிசு என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

8 views

மதுரை தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை - தொப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

7 views

மும்பை இ. எஸ்.ஐ மருத்துவமனையில் திடீர் தீ விபத்து : 6 பேர் உயிரிழப்பு

மும்பை - அந்தேரியில் உள்ள இ. எஸ்.ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில், 6 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.

6 views

சென்னை மற்றும் தஞ்சாவூரில் சிபிஐ சோதனை

சென்னை மற்றும் தஞ்சாவூரில் கார்த்தி வேலு என்பவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

59 views

மாலத்தீவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது சாலியா, புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.

30 views

ரூ. 388 கோடியில் முக்கொம்பில் புதிய அணை

திருச்சி - கொள்ளிடம் ஆற்றின் முக்கொம்பில், இடிந்த மேலணைக்கு பதிலாக 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.