உலக மண் வள நாள் விழா : விவசாயிகளுக்கு மண், நீர்வள அட்டை வழங்கல்

சென்னையில் உள்ள மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் கிராமத்தில் உலக மண் வள நாள் கடைபிடிக்கப்பட்டது.
உலக மண் வள நாள் விழா : விவசாயிகளுக்கு மண், நீர்வள அட்டை வழங்கல்
x
சென்னையில் உள்ள மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் கிராமத்தில் உலக மண் வள நாள் கடைபிடிக்கப்பட்டது. முதன்மை விஞ்ஞானி முரளிதரன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் மைய இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது நிலங்களில் இருந்து தண்ணீர் மற்றும் மண் மாதிரிகளை எடுத்து வந்தனர். அவற்றை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் பரிசோதனை செய்து, விவசாயிகளுக்கு மண் மற்றும் நீர்வள அட்டைகளை வழங்கினார்கள்.

உலக மண் வள தினம் : இயற்கை விவசாயிக்கு ஆட்சியர் விருது வழங்கி கெளரவிப்பு

காரைக்குடியில் உலக மண் வள தின விழாவை முன்னிட்டு இயற்கை விவசாயிக்கு ஆட்சியர் ஜெயகாந்தன் விருது வழங்கி கெளரவித்தார். அமராவதி புதூரில் கிராமிய பயிற்சி மையத்தில் உலக மண் வள தின விழா, தோட்டக்கலை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்றது. அப்போது , இயற்கை மண்புழு உரம் ஏற்றுமதி செய்யும் சீதாலட்சுமி என்பவருக்கு சிறந்த இயற்கை பெண் விவசாயி, என்ற விருதினை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கி கெளரவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்