"சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி" -எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
x
சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு, சார்பில், சாகித்ய அகாடமி விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018 ம் ஆண்டுக்கான விருதுக்கு, எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய " சஞ்சாரம் " என்ற நாவல், தேர்வானது. விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்ற கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தை களுக்கான ஆக்கங்கள், திரைக்கதை , திரைப்பட உரையாடல் என தமிழ் எழுத்துலகில் வலம் வருகிறார்.

ராமகிருஷ்ணனுக்கு முதல்வர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து...

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், சாகத்ய அகாடமி விருது பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு  தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதே போல் திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்