ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி டிஜிட்டல் பேனர்கள் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி டிஜிட்டல் பேனர்கள் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
x
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி, விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் சத்ய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் தாங்கள் வரும் வழியில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதை  பார்த்ததாகவும் அவற்றை வைக்க அனுமதி வழங்கியது யார் என்ற விவரங்கள் பேனரில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தனர். டிஜிட்டல் பேனர் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மீறி எப்படி அனுமதித்தீர்கள் என்று மாநகராட்சி வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்