"புத்தாண்டுக்குள் மெரினாவை சுத்தம் செய்ய வேண்டும்" - உயர் நீதிமன்றம்

புத்தாண்டிற்குள் மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புத்தாண்டுக்குள் மெரினாவை சுத்தம் செய்ய வேண்டும் -  உயர் நீதிமன்றம்
x
சென்னை வடபழனி கட்டட விபத்தில் 4 பேர் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உரிய  நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கட்டிட உரிமையாளருக்கு எதிரான குற்ற வழக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானது அல்ல என குறிப்பிட்ட நீதிபதிகள், கூடுதல் இழப்பீடு வழங்குவது பற்றி  பதில் அளிக்க மாநகராட்சிக்கு  உத்தரவிட்டனர். அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 வாரத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், கட்டிட உரிமையாளர் விஜயகுமார் மீதான குற்றப்பத்திரிக்கையை ஒரு வாரத்தில் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அப்போது, மெரினா கடற்கரை குப்பை மேடாக காட்சி அளிப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், மெரினா முழுமையாக சுத்தப்படுத்த திட்டம் வகுக்க வேண்டும் எனவும், புத்தாண்டின் போது தூய்மையான மெரினாவாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 3 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்