குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.பி, எம்.எல்.ஏக்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம்

மாநில வாரியாக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது, எவ்வளவு வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
x
992 வழக்குகளுடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 331 வழக்குகளுடன் ஒடிஷா மாநிலம், இரண்டாவது இடத்தில் உள்ளது. இதையடுத்து, 321 வழக்குகளுடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அவற்றில் 71 வழக்குகள் விசாரணையிலும், மீதமுள்ள வழக்குகள் ஆரம்ப கட்டத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் 312 வழக்குகளுடன் கேரளா நான்காவது இடத்திலும், 304 வழக்குகளுடன் பீஹார் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 

ஒரேயொரு மாவட்டத்தைக் கொண்ட டெல்லியில் 124 வழக்குகளும், புதுச்சேரியில் 34 வழக்குகளும் உள்ளன. சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது வழக்குகள் எதுவும் இல்லை. தற்போது பதவியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது  ஒட்டுமொத்தமாக நான்காயிரத்து 122 வழக்குகள் நிலுவையில் இருப்பது, இந்தப் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்