தூத்துக்குடி காற்றாலை மின் உற்பத்திக்கு மீனவர்கள்

தூத்துக்குடியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி காற்றாலை மின் உற்பத்திக்கு மீனவர்கள்
x
சிஐஐ எனப்படும் தொழில் கூட்டமைப்பு சார்பாக,  'பசுமை மின் உற்பத்திக்கான 2நாள்  கருத்தரங்கம் சென்னையில்  நடைபெறுகிறது. இதில், மத்திய அரசின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை செயலர் அணந்தகுமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தூத்துக்குடி கடல் பகுதியில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார். தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி செய்யும் இடங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளதாகவும். 35 முதல் 40 மெகாவாட் வரை காற்றாலை மற்றும் சூரிய மின் சக்திக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அனந்த குமார் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்