சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம்...

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த‌தால், சென்னைக்கு நீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் மொத்தமாக ஒன்றரை டி.எம்.சி மட்டுமே நீர் உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம்...
x
3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி  கொள்ள‌ளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 376 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது. பூண்டியில் இருந்து, வினாடிக்கு 29 கன அடி நீர் சென்னை குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறுது.3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ள‌ளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 178 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அங்கிருந்து வினாடிக்கு 37 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

இதேபோல 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ள‌வு கொண்ட புழல் ஏரியில், ஆயிரத்து 87 மில்லியன் கன அடி நீர் இருக்கிறது. இங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 90 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், தற்போது 40 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நான்கு ஏரிகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில், வெறும் ஆயிரத்து 681 மில்லியன் கன அடி... அதாவது, ஒன்றரை டி.எம்.சி நீர் மட்டுமே தற்போது இருப்பு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்