மாணவர்களுக்கு விற்க மது பாட்டில்கள் கடத்தல்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த கென்ய நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் - புதுவை சாலையில் உள்ள ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மாருதி காரில் ஆறு அட்டை பெட்டிகளில் விலை உயர்ந்த புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த கென்ய நாட்டை சேர்ந்த ஜான் போஸ்கோ என்ற வாலிபரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஜான் போஸ்கோ, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் என்பதும் அவர் இது போன்று மது கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
Next Story