ஓடும் ரயிலில் கொள்ளை சம்பவம் : மத்திய பிரதேசத்தில் தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை
பதிவு : டிசம்பர் 03, 2018, 05:00 PM
ரயிலில் 5 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கு விசாரணைக்காக மத்திய பிரதேசம் சென்றுள்ள தமிழக போலீசார் மீது தாக்குதல் நடைபெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் - சென்னை ரயிலில் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மொகர் சிங் உள்ளிட்ட 7 பேரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை கைது செய்ய மத்திய பிரதேசத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே, மற்றொரு கொள்ளை வழக்கு தொடர்பாக, மொகர் சிங்கின் சொந்த கிராமத்துக்கு மத்திய பிரதேச போலீசார் சென்றபோது, அவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. தமிழக போலீசார் என நினைத்து இந்த தாக்குதல் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் அதே பகுதியில் தங்கியுள்ள சிபிசிஐடி போலீசார் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதை உறு​தி செய்தனர். மேலும், கொள்ளையடித்த பணத்தில்   சொந்த ஊரில், கொள்ளையர்கள் வாங்கிய சொத்து குறித்த ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

610 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3301 views

பிற செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

15 views

கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி : தென்சென்னையில் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம்

தென்சென்னையில் நாளையும் நாளைமறுநாளும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

20 views

15 வயது சிறுமியை ஒரு வாரமாக அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்...

நாகையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

151 views

பிரதமர் மோடிக்கு எதிராக அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் - வைகோ

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

13 views

ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கண்டனம்

மேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.

99 views

பிப்ரவரி 28-ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.