கஜா புயல் : புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணப்பொருட்கள்
பதிவு : டிசம்பர் 02, 2018, 07:42 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள 27 பொருட்களை பேக்கிங் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2 லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் அட்டைபெட்டியில் வைத்து பேக்கிங் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.நுகர்பொருள் வாணிப கழகம் வழங்கிய கைலி, நைட்டி, குடை, தார்ப்பாய் உள்ளிட்ட 27 பொருட்கள் அட்டைப் பெட்டியில் இடம்பெற்றுள்ளன.இன்னும் ஒரிரு தினங்களில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.