"மருத்துவர்கள் கிராமப்புற சேவையை கட்டாயமாக்க வேண்டும்" - வெங்கய்யா நாயுடு

இளம் மருத்துவர்கள் கிராம புறங்களில் சேவை செய்ய வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்..
மருத்துவர்கள் கிராமப்புற சேவையை கட்டாயமாக்க வேண்டும் - வெங்கய்யா நாயுடு
x
தனியார் குழந்தைகள் மருத்துவமனையின் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், தமிழகம் மருத்துவ துறையில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். பின்னர் பேசிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, குழந்தை மற்றும் தாய்மார்களின் நலனுக்கான மருத்துவர்கள் அதிகளவில் இந்தியாவிற்கு தேவைப்படுவதாகவும், ஆரம்ப சுகாதார நிலையங்களை மாநில அரசு மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 24 கோடி குழந்தைகள் பிறப்பதாகவும், குழந்தை இறப்பை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு  தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்