பசுமை வீடுகள் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களை பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா பயனாளிகளாக சேர்க்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பசுமை வீடுகள் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களை பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா பயனாளிகளாக சேர்க்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கஜா புயலில் நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக தெரிவித்துள்ளார். எனவே வீடுகளை இழந்த அனைவருக்கும் மத்திய அரசின் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கவும், அதற்கான மதிப்பீட்டுத் தொகையை 50 சதவீதம் உயர்த்தி வழங்கவும் உத்தரவிட வேண்டும்  என்றும் கேட்டுக்கொண்டுள்ளனார். 

மனுவை விசாரித்த  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலர், மற்றும் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிசம்பர் 5-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்