சென்னை விமான பயிற்சி பள்ளி ஜனவரி 15 முதல் திருச்சிக்கு இடமாற்றம்
பதிவு : டிசம்பர் 01, 2018, 09:16 AM
சென்னையில் செயல்பட்டு வந்த மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் விமான பயிற்சி பள்ளி, திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வந்த மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் விமான பயிற்சி பள்ளி, திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் மற்றும் மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப் விமான பயிற்சி பள்ளியை சேர்ந்த ஜேக்கப் செல்வராஜ் ஆகியோர் தெரிவித்தனர். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தற்போது 30 மாணவர்கள் பயிற்சி பெற்று வருவதாகவும், இதற்கு பனிரெண்டாம் வகுப்பு தகுதி போதுமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.