வளர்த்த மரங்களை அகற்ற மனமும், பணமும் இல்லை - தென்னை விவசாயிகள் கவலை
பதிவு : நவம்பர் 22, 2018, 06:17 PM
கஜா புயலால் சாய்ந்து விழுந்த தென்னை மரங்களில் இருந்து இளநீரை இலவசமாக எடுத்துச் செல்லுங்கள் என தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பலரும் கூறி வருகின்றனர்.
* டெல்டா மாவட்ட விவசாயிகளின் வருமானத்திற்கு பேருதவியாக இருந்த தென்னை மரங்கள் எல்லாம் கஜா புயலில் சிக்கி வேரை இழந்து வீழ்ந்து கிடந்த காட்சிகள் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை.

* குலை குலையாக இருந்த தென்னை மரங்கள் எல்லாம் வேரோடு வீழ்ந்து கிடப்பதை பார்த்த விவசாயிகள் பலரும் சோகத்தின் உச்சியில் இருக்கின்றனர். 

* லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில் அவற்றை அகற்ற மனமில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் நிவாரண பணிகளுக்காக தங்கள் ஊருக்கு வரும் வாகனங்களில் தங்கள் வீட்டு மரத்தில் இருந்த இளநீரை போட்டு அனுப்பும் அளவுக்கு பெருந்தன்மை கொண்டவர்களாகவும் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.

* கீழே விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்றுவதற்கு உரிய உபகரணங்கள் இல்லாததாலும், அவற்றை அகற்ற முடியாத சூழலில் விவசாயிகள் உள்ளனர். எனவே தங்கள் பகுதியில் உள்ள இளநீரை எல்லாம் இலவசமாக எடுத்துச் செல்லுங்கள் என அவர்கள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

* தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த தென்னை விவசாயி ஒருவர் இந்த தகவலை பொதுமக்களிடம் தெரிவிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.