எண்ணூர் துறைமுகம் : எண்ணெய் கசிவு வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய் கசிவு தொடர்பான வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
எண்ணூர் துறைமுகம் : எண்ணெய் கசிவு வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்
x
சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு அண்மையில் வந்த எம்.டி. கோரல் ஸ்டார் என்ற கப்பலில் இருந்து இறக்கும் போது கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அக்கப்பலை சிறை பிடித்து ,வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கானா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எண்ணெய் கசிவு காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் இறந்து விடும் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மனுவில் 
தெரிவிக்கப்பட்டிருந்தது. கடலில் கசிந்த எண்ணெயை அகற்றுவதற்கான செலவை கப்பல் நிறுவனத்திடம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவில், 95 சதவீதம் அகற்றப்பட்டு விட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை எனக் கூறி, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்