நிர்மலாதேவி விவகாரம் - வழக்கு நவ. 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நிர்மலா தேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.
நிர்மலாதேவி விவகாரம் -  வழக்கு நவ. 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உண்மை வெளியாக வேண்டுமென்றால் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும், அறிக்கையை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அப்போது, குற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா? என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். மேலும், மனுதாரர் சார்ந்துள்ள அமைப்பின் பதிவு மற்றும் நிர்வாகிகள் பற்றிய விவரங்களை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்