கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை
x
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில்,  கஜா புயலால் நாகை , புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புயலில் சிக்கி 45 பேர் பலியான நிலையில், 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். 2 லட்சம் மரங்கள் சாய்ந்ததோடு,  735 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
 
* புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

* புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவித்து, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருந்தார். 

* இதனை  விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு  அமர்வு  புயல் சேதங்களை சீரமைப்பதற்காக, மத்திய அரசிடம் என்ன உதவியை தமிழக அரசு கோரியது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். 

* தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு  வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்