"நவ.19 வரை டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் பலி" - தமிழக அரசு தகவல்

தமிகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 13 பேரும் பன்றி காய்ச்சலுக்கு 27 பேரும் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நவ.19 வரை டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் பலி -  தமிழக அரசு தகவல்
x
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், டெங்கு, பன்றி காய்ச்சலுக்கான போதுமான மருந்துகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நவம்பர் 19 ஆம் தேதி வரை டெங்குவுக்கு 13 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு 27 பேரும் உயிரிழந்திருப்பதாகவும், டெங்கு காய்ச்சலுக்கு 3 ஆயிரத்து 440 பேரும், பன்றி காய்ச்சலுக்கு ஆயிரத்து 745 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் நிபுணர் குழுவை அனுப்பி, அங்கு போலவே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்