"ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் அதிகாரம் இல்லை" - தமிழக அரசு பதில்

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதை தடை செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் அதிகாரம் இல்லை - தமிழக அரசு பதில்
x
மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  உரிமம் பெறாத, பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்க தடை விதித்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருந்து கட்டுப்பாட்டு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம் என்றும் ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசு வரைவு சட்டம் இயற்றியுள்ளதாகவும், அந்த சட்டத்தில் முழுமையான தடை விதிக்கப்பட்டால் மட்டுமே மாநில அரசால் அமல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்