கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பெறும் பாதிப்புக்குள்ளான தமிழகம்

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் தமிழகத்தின் பெருபாலான பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பெறும் பாதிப்புக்குள்ளான தமிழகம்
x
அதிகாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
கஜா புயல் மீட்பு பணியை விரைவுபடுத்த வலியுறுத்தி மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தடைபட்ட குடிநீர் மற்றும் மின் வினியோகத்தை உடடினயாக சீர்செய்ய வேண்டும் என அவர்கள் முழுக்கம் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுட்டவர்களுடன்  பேச்சுவார்தை நடத்த வட்டார வளர்ச்சி அலுவலர் மருததுரை சென்றுளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அரசு அதிகாரிகளின் 5 வாகனங்கள் எரிப்பு சம்பவம் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தனாவதி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.அப்போது அதிகாரிகளின் 3 வாகனங்கள் மற்றும் போலீசாரின் 2 வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 5 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தகவலறிந்து வட்டாட்சியரை மீட்க சென்ற டி.எஸ்.பி. அய்யனார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் காயம் அடைந்தார். இச் சம்பவத்தையடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். வாகனங்கள் எரிப்பு சம்பவம் தொடர்பாக வீடு வீடாக சென்று நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை  

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மேலவாசல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருவா குறிச்சி, நள்ளிக்கோட்டை, பேரையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் புயலால் ஏராளமான மரங்கள் விழுந்தும் வீடுகள் சேதமடைந்தும் இதுவரை  எந்த  மீட்பு பணிகளும் நடைபெறவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். குடிநீர், மின்சார வசதி இன்றி  தவித்து வருவதாக கூறிய கிராம மக்கள், மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கி நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

3 நாட்களாக அதிகாரிகள் வரவில்லை - கிராம மக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தாங்குடியில் பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். கஜா புயல் தாக்கி 3 நாட்களாகியும் இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினார். அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அரசு பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டில்  இரண்டு நாட்களாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த  பொதுமக்கள், இரண்டு அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு  அரசு பேருந்துகளை பொதுமக்கள் விடுவித்தனர்.

மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் 

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் எந்த மீட்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சை-பட்டுக்கோட்டை சாலை , ஒரத்தநாடு,  கோவிலூர் , பாப்பாநாடு , மதுக்கூர் சாலை , குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  மீட்பு வாகனங்கள் உள்பட பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் காத்து நின்றன. அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டதை கைவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்