அரசு மருத்துவமனை சுவற்றில் மோதிய சரக்கு லாரி

தர்மபுரி ரயில் நிலையத்தில் இருந்து 13 டன் நெல்மூட்டைகள் ஏற்றிக்கொண்டு அரசு கிடங்கிற்கு சென்ற லாரி விபத்துக்குள்ளானது.
அரசு மருத்துவமனை சுவற்றில் மோதிய சரக்கு லாரி
x
தர்மபுரி ரயில் நிலையத்தில் இருந்து 13 டன் நெல்மூட்டைகள் ஏற்றிக்கொண்டு அரசு கிடங்கிற்கு சென்ற லாரி விபத்துக்குள்ளானது. எதிர்திசையில் வந்த தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் கவனக்குறைவாக வளைத்ததில், லாரி மோதுவதை தவிர்க்க, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சுவற்றில் மோதி நின்றது. இதில் லாரி ஓட்டுனர் லேசான காயத்துடன் தப்பித்தார். பள்ளி பேருந்தின் மீது மோதுவதை தவிர்த்த லாரி ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்