காலவரையின்றி மூடப்பட்ட கோடியக்கரை சரணாலயம்

கஜா புயலால் நாகை மாவட்டம் கோடியக்கரை சரணாலயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
காலவரையின்றி மூடப்பட்ட கோடியக்கரை சரணாலயம்
x
கஜா புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தது. அதிலும் நாகை மாவட்டம் கஜா புயலின் பிடியில் சிக்கி உருக்குலைந்தது. நாகை மாவட்டம் கோடியக்கரையில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் 600க்கும் மேற்பட்ட மான்கள், மயில்கள், அபூர்வ வகை பறவைகள், நரி, குதிரை என ஏராளமான விலங்குகள் உள்ளன. அதேபோல் பறவைகள் சரணாலயத்திலும் ஏராளமான பறவை இனங்களை பார்க்க முடியும். ஆனால் கஜா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயம் முழுவதும் வெள்ளத்தில் சூழ்ந்தது. சரணாலயத்தில் இருந்த பறவைகளும் விலங்குகளும் என்ன ஆனதே என்று தெரியாத அளவுக்கு அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அந்த வெள்ளத்திற்கு மத்தியிலும் ஒரு சில விலங்குகள் மட்டுமே கண்ணில் தென்படுகிறது. சரணாலயத்தின் உள்ளே இருந்த மரங்கள் மற்றும் மதில்சுவர்கள் எல்லாம் உருக்குலைந்து காணப்படுவதால் அவற்றை சீரமைக்க பல நாட்கள் ஆகலாம் என தெரியவருகிறது.

 

Next Story

மேலும் செய்திகள்