கோவில்களின் புராதன தன்மை தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோவில்களின் புராதன தன்மை குறித்து நிபுணர் குழுக்கள் தான் ஆய்வு செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவில்களின் புராதன தன்மை தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
கோவில் கும்பாபிஷேகத்துக்கு நிபுணர் குழுக்கள் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவில் இருந்து கிராம கோவில்களுக்கு விலக்கு கோரி ஸ்ரீரங்கம் செண்டலங்கார ஜீயர் அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,  கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அந்த கோவில்களின் பழமை மற்றும் புராதன மதிப்பு குறித்து ஆய்வு செய்ய அரசு அமைத்துள்ள குழுவை அணுக வேண்டும் என்றும், அந்த குழு அளிக்கும் கருத்துருக்களை உயர் நீதிமன்றம் நியமித்துள்ள நிபுணர் குழு ஆய்வு செய்து முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணை பழைய கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும் என தவறாக புரிந்து கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு, கோவில்களின் புராதன மதிப்பு குறித்தும், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும் இரு குழுக்களும் தான் முடிவு செய்ய முடியும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்