காவிரி ஆற்றில் காதல் தம்பதி சடலங்கள் மீட்பு : ஆணவக்கொலையா ? - போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்த காதல் தம்பதி, ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி ஆற்றில் காதல் தம்பதி சடலங்கள் மீட்பு : ஆணவக்கொலையா ? - போலீசார் விசாரணை
x
ஒசூர் அருகே சூடகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தீஸ் மற்றும் சுவாதி, கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த பத்தாம் தேதி, இருவரும், காணாமல் போனது குறித்து, ஒசூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் ஒசூர் பகுதி போலீசார், நந்தீஸ் - சுவாதி இருவரையும் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். 
இந்நிலையில் இருவரும், கர்நாடக மாநிலத்தில் காவேரி ஆற்றில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். சடலங்களை கைப்பற்றிய போலீசார், இது ஆணவக்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் 

நந்தீஷ் - சுவாதி தம்பதியை கடத்தி ஆணவப்படுகொலை செய்து உடல்களை கர்நாடக மாநிலத்தில் வீசியதாக குற்றம்சாட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆணவக்கொலை செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும், உயிரிழந்த நந்தீஷின் குடும்பத்திற்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
.

Next Story

மேலும் செய்திகள்