வரும் 18, 19 ஆம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது
வரும் 18, 19 ஆம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
x
கஜா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டிருப்பதால் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வரும் 18, 19 ஆம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லலாம் என அறிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் புதிய காற்றழுத்த நிலை உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும்தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். மேலும், கடந்த ஒன்றாம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பெய்த வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 6 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கஜா புயலின் எதிரொலியால் ஏற்பட்ட சேதங்கள் 

அனைத்து துறைகளும் கஜா புயல் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது -  பன்னீர்செல்வம்

கஜா புயல் - ராமநாதபுரத்தில் பாதிப்புகள் என்ன? 

கஜா புயல் - பல்வேறு விபத்துக்களில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
கஜா புயல் பாதிப்பில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 4 பேர், கடலூரில் ஒரு பெண் உள்பட 3 பேர், திருவாரூரில் 2 பேர், புதுக்கோட்டையில் 3 பேர், திருச்சியில் இரண்டு பேர் என இதுவரை மொத்தம் 14 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.  

விரைவாக இயல்வு நிலை திரும்ப துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - உதயகுமார்
கஜா புயல் பாதித்த இடங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சேத மதிப்பை கணக்கெடுக்கும் பணியும் தொடங்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்