"இன்று இரவு 11.30 மணிக்கு 'கஜா' கரை கடக்கிறது"

கஜா புயல், மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் நாகை அருகே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 11.30 மணிக்கு கஜா கரை கடக்கிறது
x
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து தென் கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வட கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அதிகாலையில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த கஜா புயல், தற்போது மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது, இன்று பிற்பகலுக்குள் தீவிரமடைந்து, கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கிறது. குறிப்பாக, நாகை அருகே இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கஜா புயல் கரையை கடக்கும்போது, காற்றின் வேகம் 80 முதல் 110 கிலோ மீட்டர் வரை இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இன்று காலையில் இருந்தே கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், தெற்கு ஆந்திராவில் இருந்து புதுச்சேரி மற்றும் தமிழக கடலோரத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கும் அதிகமாக அலைகள் எழும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கஜா புயல் பாதிப்பு : புகார் அளிக்க - 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

மாநில கட்டுப்பாட்டு அறை எண் - 1070 ; 32 மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு எண்- 1077

'கஜா' புயல் காரணமாக தமிழகத்தில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் இந்த பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகு, தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, கஜா புயல் பாதிப்பு - புகார் அளிக்க ஏதுவாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாநில கட்டுப்பாட்டு அறை எண்ணை 1070 என்ற எண்ணிலும், 32 மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை எண்ணை 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

"நாளை காலை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்"
கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் காரைக்காலில் மரங்கள் வீடுகள் மற்றும் சாலைகளில் சேதம் ஏற்படக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபோல, ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள், நாளை காலை வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

கஜா புயல் இன்று மாலை கரையை கடக்கிறது - புயலை எதிர்கொள்ள தயார்நிலையில் கடலூர்

கஜா புயல் முன்னெச்சரிக்கை: சென்னையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

'கஜா' புயல் : புதுக்கோட்டையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கஜா புயல் எதிரொலி : பாம்பனில் ரயில்போக்குவரத்து ரத்து

'கஜா' புயல் : நாகை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கஜா புயல் - புதுவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன.?

கஜா புயல் முன்னெச்சரிக்கை: சென்னையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

மாலை அல்லது இரவில் 'கஜா' கரை கடக்கிறது

'கஜா' புயல் : திருவாரூரில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கஜா புயல் இரவு 11.30 மணி அளவில் கரை கடக்கிறது



கஜா புயல் முன்னெச்சரிக்கை: சென்னையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

இரவு 8 மணி முதல் 11 மணி வரை கரையை கடக்கிறது கஜா - புதிய தகவல்

Next Story

மேலும் செய்திகள்