கஜா புயல் - அண்ணா பல்கலை. தேர்வுகள் ரத்து

கஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் உறுப்பு கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
கஜா புயல் - அண்ணா பல்கலை. தேர்வுகள் ரத்து
x
கஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார். பாரதிதாசன், திருவள்ளுவர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களிலும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திலும், இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்