ரவுடிகளை கட்டுப்படுத்த ஏன் சிறப்புப்பிரிவு கூடாது? - நவ.30 -ல் பதிலளிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

எந்தெந்த அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்டவர்களை நிர்வாகிகளாக நியமித்துள்ளன என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி வருகிற 30 ஆம் தேதி பதில் அளிக்க, காவல்துறை டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ரவுடிகளை கட்டுப்படுத்த ஏன் சிறப்புப்பிரிவு  கூடாது? - நவ.30 -ல் பதிலளிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தாம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து வேலு என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில், ரவுடி கும்பல்கள் தீவிரமாக இருப்பதாகவும், இவர்கள், கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பீதியில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.  இந்த ரவுடி கும்பலையும், கூலிப்படையினரையும் ஒழித்து விட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழக டிஜிபியையும், மத்திய உள் துறை செயளாலரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் தீவிரமாக உள்ளன? எந்தெந்த அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்டவர்களை நிர்வாகிகளாக நியமித்துள்ளன?காவல்துறையினரின் பிடியில் இருந்து  தப்பிப்பதற்காக ரவுடிகள் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனரா?என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, ரவுடிகளை கட்டுப்படுத்த டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஏன் சிறப்புப்பிரிவு துவங்க கூடாது? என்றும் நீதிபதிகள் வினவினர். இக்கேள்விகளுக்கு, வரும் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக டிஜிபி க்கும், மத்திய உள்துறை செயலாளருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்