தோனி, கோலி இல்லாததால் காற்று வாங்கிய சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்..!!

இந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
தோனி, கோலி இல்லாததால் காற்று வாங்கிய சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்..!!
x
சுமார் 48 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வசதி உடைய இந்த மைதானத்தில் , சட்ட சிக்கல் காரணமாக ஐ,ஜே,கே ஆகிய மூன்று மாடங்களில் பார்வையாளர்கள் அமர தடை விதிக்கப்பட்டது.இருந்தும் நேற்றைய போட்டியில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மாடமும் காலியாகவே இருந்தது. இதற்கு முக்கிய காரணம் சென்னையின் தத்து பிள்ளையாக விளங்கும் தோனி இந்த தொடரில் இல்லாதது, சென்னை ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடக் கூடிய ஒரு வீரரும் நேற்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை. பற்றாதக்குறைக்கு கேப்டன் கோலியும் இல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. 

இது தவிர மேற்கிந்திய தீவுகள் அணியிலும் கெயில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாத இரண்டாம் தர அணியையே இந்தியா எதிர்கொண்டது. இதனால், இந்த தொடர் சுவாரசியமின்றியே இருந்தது. ஐ.ஜே.கே மாடத்திற்கு தடை, பொழுதுபோக்கு வரி போன்ற காரணங்களால் டிக்கெட் விலையும் ஆயிரத்து 200 ரூபாய்க்கு மேல் இருந்தது.தோனி இல்லாத போட்டிக்கு ஏன் இவ்வளவு விலை கொடுத்து பார்க்க வேண்டும் என்ற மனநிலையும் ரசிகர்கள் இடையே இருந்தது.கிரிக்கெட் போட்டிக்கு ஸ்பான்சர், அரசு உயர் அதிகாரிகளுக்கு இலவச டிக்கெட்கள் வழங்கப்படுவதிலும் பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் போது, திரையரங்குகளில் கூட்டம் குறைகிறது என்ற குற்றச்சாட்டு திரைத்துறையினரால் எழுப்பப்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக நேற்று திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியும், சேப்பாக்கம் மைதானம் காற்றும் வாங்கியது.

Next Story

மேலும் செய்திகள்