மது அருந்தியிருந்த பேருந்து நடத்துநர் : போலீசில் ஒப்படைத்த மக்கள்

அவிநாசியில் மது அருந்தியிருந்த அரசு பேருந்து நடத்துநரை பொதுமக்கள் போலிசில் ஒப்படைத்த நிலையில், பணி முடிந்த பின் மது அருந்திய தன்னை, கட்டாயப்படுத்தி பணி செய்ய அதிகாரிகள் அனுப்பியதாக நடத்துநர் புகார் அளித்துள்ளார்.
மது அருந்தியிருந்த பேருந்து நடத்துநர் : போலீசில் ஒப்படைத்த மக்கள்
x
திருப்பூரில் அரசு பேருந்தின் நடத்துநர் துரை, மது அருந்திய நிலையில் பயண சீட்டு தரமுடியாமல் தள்ளாடியபடி இருந்துள்ளார். பல முறை கேட்டும் துரை பயண சீட்டு தராமல் தள்ளாடியபடி இருந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை நிறுத்தி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் துரையை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சோதனைக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், பணி நேரம் முடிந்த நிலையில் மது அருந்திவிட்டு பணிமனையின் ஓய்வு அறையில் தூங்கி கொண்டிருந்த தன்னை, நேர கண்காணிப்பாளர் ரகுபதி எழுப்பி பணிக்கு ஆட்கள் இல்லாததால்  உடனடியாக பணிக்கு செல்லுமாறு கட்டாயப் படுத்தியதாக துரை கூறியுள்ளார். 

மேலும் தான் மது அருந்தியதை தெரிவித்தும் பணி செய்ய  மாற்று ஆள் இல்லை என தன்னை கட்டாயப்படுத்தி பணி செய்ய அனுப்பியதாக நடத்துநர் துரை புகார் தெரிவித்துள்ளார்.   

Next Story

மேலும் செய்திகள்