"நேர்மையான தமிழகத்தை உருவாக்க வாய்ப்பு வரும்" - நடிகர் கமல்ஹாசன்

இந்த ஆட்சியை அகற்றி விட்டு நேர்மையான தமிழகத்தை உருவாக்கும் ஒரு வாய்ப்பு மக்களுக்கு மிக விரைவில் அமைய இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நேர்மையான தமிழகத்தை உருவாக்க வாய்ப்பு வரும் - நடிகர் கமல்ஹாசன்
x
இந்த ஆட்சியை அகற்றி விட்டு நேர்மையான தமிழகத்தை உருவாக்கும் ஒரு வாய்ப்பு மக்களுக்கு மிக விரைவில் அமைய இருக்கிறது  என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஒசூரில் மக்கள் மத்தியில் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பது,  சுயநலத்தில் தாம் சொல்வது அல்ல, பொதுநலத்தில் சொல்லும் வார்த்தை என குறிப்பிட்டார்.  அரசின் மீதான கோபத்தை சேமித்து வையுங்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.  ஜனநாயக ஆயுதமாக கையில் கிடைக்க போகும் ஓட்டுக்கள் மூலம் நீங்கள் நிரூபிக்க வேண்டும், அதனை விலைக்கு வாங்க பலரும் வருவார்கள் அதற்கு எல்லாம் மயங்காமல் நீங்கள் புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்