சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் : முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார், செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து, முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் : முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார், செங்கோட்டையன்
x
* பள்ளிக்கல்வித்துறையில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய நான்கு பிரிவுகளில் ஆயிரத்து 350 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஆயிரத்து 80 ஆசிரியர்களின் தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகளும், தகுதியில்லாத பலர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. 

* இது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இது குறித்தும், ஆசிரியர் தேர்வு வாரிய  செயல்பாடுகள் குறித்தும் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சருடன் எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். இதற்கு பிறகு முக்கிய முடிவுகளை அமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு, அதன் பணிகளை டி.என்.பி.எஸ்.சி.-கே வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்