"இலங்கையில் ஜனநாயகப் படுகொலை" - அன்புமணி ராமதாஸ்
பதிவு : நவம்பர் 10, 2018, 04:40 PM
இலங்கையில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதாகவும், அதில் இந்தியா தலையிட வேண்டும் என்றும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதாகவும், அதில் இந்தியா தலையிட வேண்டும் என்றும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அந்நாட்டின் உள் விவகாரம் என்றாலும், அதில்  இந்தியாவின் பாதுகாப்பும், ஈழத்தமிழர் நலன்களும் அடங்கியிருப்பதால், இந்த விவகாரத்தில் சம்பந்தமில்லை எனக் கூறி, இந்திய அரசு கடந்து செல்ல முடியாது என்று சுட்டிக் காட்டியுள்ளார். இந்த விஷயத்தில், இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல்,  உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக, அன்புமணி தெரிவித்துள்ளார். 

 "தமிழர்களின் முதுகில் மீண்டும் குத்திவிட்டார், சிறிசேனா" - வைகோஇலங்கையில், ராஜபக்சேவிற்கு, முழு அதிகாரத்தையும் வழங்குவதற்காக அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டு சதி நாடகத்தை நிறைவேற்றி விட்டதாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழர்களுக்கு  நீதி கிடைக்காது என்றும், ராஜபக்சே கரங்களுக்கு மீண்டும் அதிகாரம் வருமானால், முதல் கட்டமாக,  தமிழர்களின் பண்பாட்டுத் தனித்தன்மையை அழிக்க, கலாச்சாரப் படுகொலை நடைபெறும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

"தமிழர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்" - தினகரன்* இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமென்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து, அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுவதாக கூறியுள்ளார். ராஜபக்சேவை பிரதமராக அறிவித்த கொடுமையை, அந்நாட்டு நாடாளுமன்றம் முறியடித்துவிடும் என்று உலகமே எதிர்நோக்கியிருந்த நேரத்தில், இந்த ஜனநாயக விரோத செயலை புரிந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

* இந்திய அரசு, இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து, தமிழர்களின் உயிர், உடைமை, நலனுக்கு தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஐ.நா.மன்றம் தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவை மிரட்டிப் பார்க்கிறார் - வேல்முருகன் இலங்கையில் நடந்திருப்பது, மாபெரும் ஜனநாயக படுகொலை என்று, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இரவோடு இரவாக கலைக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு துணை போகிறார் அதிபர் சிறிசேன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜபக்சே பிரதமர் ஆவது அந்த நாட்டிற்கும் நல்லதல்ல, இந்தியாவிற்கும் நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்.  அமெரிக்காவோடும், சீனாவோடும், கைகோர்த்துக்கொண்டு  இந்தியாவை  சிறிசேன மிரட்டி பார்க்கிறார் என்றும், இந்தியாவின் ராஜதந்திரம் தோல்வியடைந்திருக்கிறது என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்
  

தொடர்புடைய செய்திகள்

இலங்கை பிரதமர் ராஜபக்சே நாளை, ராஜினாமா...

இலங்கை அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு பிரதமர் ராஜபக்சே நாளை சனிக்கிழமை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

117 views

இலங்கை பிரச்சினை : விக்னேஸ்வரன் கருத்து

இலங்கையில் தற்போது உருவாகி உள்ள அரசியல் நெருக்கடியால், மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.

211 views

அரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்

தமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

566 views

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

158 views

பிற செய்திகள்

இலங்கையில் பட்டம் விடும் போட்டி : விதவிதமான பட்டங்களை பார்த்து ரசித்த மக்கள்

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலங்கையில் நடந்த பட்டம் விடும் போட்டியில் வண்ணமயமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டது.

15 views

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

வணிக வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்...

25 views

சிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்

சிறைச்சாலையில் கைதிகள் மீது சரமாரி தாக்குதல் : வீடியோவை வெளியிட்ட கைதிகள் உரிமை பாதுகாப்பு சங்கம்

12 views

உலக வங்கியின் புதிய தலைவர் இந்திரா நூயி ? : ஜிம் யோங் கிம் ராஜினாமாவை தொடர்ந்து வெள்ளை மாளிகை பரிசீலனை

உலக வங்கியின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

21 views

மேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்

மேக கூட்டங்களை சூழ்ந்த பனிப்புகை : மலையில் இருந்து உருண்டோடிய பனிப்புயல்

12 views

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

உறைப்பனி குட்டையில் சிறுவன் தத்தளிப்பு : கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.