தமிழ்நாடு : 119 அரசு பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நாளை
பதிவு : நவம்பர் 10, 2018, 02:02 PM
தமிழகம் முழுவதும் ஆயிரத்து 119 அரசு பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நாளை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்- 2 தேர்வுக்கு, 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 2 ஆயிரத்து 268  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட 997 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட் இன்றி, தேர்வறைக்குள் அனுமதியில்லை காலை 9 மணிக்குள் வரவேண்டும், நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பென் மட்டுமே பயன்படுத்த வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன் வினாத் தாள்  வழங்கப்படும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள் தரப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கவேண்டும், விடைகளை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன், மின்னணு சாதன பொருட்களுக்கு அனுமதியில்லை என்றும், ஒரு கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே எழுத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வறையில் தவறான மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வாணையம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2423 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3730 views

பிற செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - காங். செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

54 views

குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் - திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

ஒகேனக்கல் கூட்டு நீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கு கொண்டு சேர்த்து குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

12 views

வேட்பாளர்கள் செலவு பட்டியலின் எதிரொலி - தென்னந்தோப்பில் கூட்டம் போடும் கட்சிகள்

வேட்பாளர்கள் செலவு பட்டியலின் எதிரொலியாக, உடுமலையை சேர்ந்த அரசியல் கட்சியினர், தென்னந்தோப்பில் கூட்டம் போடும் புதிய யுக்தியை கையாளுகின்றனர்.

61 views

காரில் கொண்டுவரப்பட்ட ரூ 3.94 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

தாராபுரத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 94 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

17 views

வர்ணஜாலமாக மாறியது சவுகார்பேட்டை - வண்ண பொடிகள் தூவி மகிழ்ந்த வட இந்தியர்கள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டை வண்ண மயமாக காட்சியளித்த‌து.

27 views

விஏஓக்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் ஓய்வு பெற்ற ஆயிரம் விஏஓக்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.