தமிழகத்திற்கு புதிய புயல் ஆபத்தா? - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அந்தமானில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 தினங்களில் வடமேற்கில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு புதிய புயல் ஆபத்தா? - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும்,  இதன் காரணமாக தென் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடியில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் இதன் காரணமாக தமிழக மீனவர் தென் வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்