நெல்லை கோவிலில் அரிய வகை 'திமிரி நாதஸ்வரம்'
பதிவு : நவம்பர் 10, 2018, 11:38 AM
மிகவும் பழமையான திமிரி வகை நாதஸ்வரம் நெல்லையில் உள்ள சாலைக்குமார சாமி கோவிலில் வாசிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில், சஷ்டி மற்றும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சஷ்டி விழாவில், சுவாமி உலாவின்போது, 12 துளைகள் கொண்ட திமிரி நாதஸ்வரம் வாசிக்கப்படுகிறது. வழக்கமாக வாசிக்கப்படும் 'பாரி' வகை நாதஸ்வரம் 2 கட்டை கொண்டது. ஆனால், திமிரி நாதஸ்வரம், 5 கட்டையில் வாசிக்கக் கூடியது. நாதஸ்வர வகைகளின் முன்னோடியான திமிரி நாதஸ்வரத்தை, சாலைக்குமார சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.