சேலம் ரயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.5.78 கோடி பணத்தை மூன்றே மாதத்தில் காலி செய்த கொள்ளையர்கள்

சென்னை - சேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட 5.78 கோடி பணத்தை பணமதிப்பிழப்பிற்கு முன்பே கொள்ளை கும்பல் செலவு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
சேலம் ரயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட ரூ.5.78 கோடி பணத்தை மூன்றே மாதத்தில் காலி செய்த கொள்ளையர்கள்
x
கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில், 5 கோடியே 78 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனது.  இந்த கொள்ளை சம்பந்தமாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த, 5 பேரை, சிபிசிஐடி போலீசார் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில்,ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட தினத்திற்கு முன்னதாக, பணத்தை கொள்ளையர்கள் பங்கு பிரித்து செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. பணத்தை, தங்கமாகவோ, வேறேதும் பொருளாகவோ மாற்றி வைத்திருக்கிறார்களா என சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இது வரை 7 பேரை கைது செய்தும் கூட கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 4-ல் ஒரு பங்கு கூட மீட்க முடியாமல் சிபிசிஐடி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்