கோவையில் விஜய் பேனர்கள் கிழிப்பு - சர்கார் படத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு

கோவையில் விஜய்யின் சர்கார் படம் திரையிட்ட தியேட்டர் முன் கூடிய அதிமுக தொண்டர்கள், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி முழக்கம் எழுப்பினர்.
கோவையில் விஜய் பேனர்கள் கிழிப்பு -  சர்கார் படத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு
x
கோவையில் விஜய்யின் சர்கார் படம் திரையிட்ட தியேட்டர் முன் கூடிய அதிமுக தொண்டர்கள், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி முழக்கம் எழுப்பினர். இதில் ஒரு பிரிவினர், தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பேனர்களை கிழித்தெறிந்தனர். 

சர்கார்- திரையரங்கத்தை அதிமுகவினர் முற்றுகை
சென்னை தாம்பரம் நேஷனல் திரையரங்கை அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை திரையரங்கில் பேனர்கள் அகற்றம்
சென்னையில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த, படத்தின் பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகம் முழுவதும் "சர்கார்" படத்திற்கு எதிர்ப்பு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலும் விஜய்யின்
சர்கார் படத்திற்கு எதிராக, அதிமுக தொண்டர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் இலவச திட்டங்களுக்காக வழங்கப்படும் பொருட்கள், தீவைக்கப்பட்டு எரிக்கப்படும் காட்சியை நீக்கும் வரை, போராட்டம் நீடிக்கும் என்று அதிமுகவினர் எச்சரித்துள்ளனர்.

சர்கார் படம் ஓடும் திரையரங்கில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதம்

Next Story

மேலும் செய்திகள்