சிறப்பு ஆசிரியர் தேர்வில் தொடரும் சர்ச்சை

சிறப்பாசிரியர் நியமனத்தில் தொடர்ந்து குளறுபடிகள் நடைபெற்று வருவதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறப்பு ஆசிரியர் தேர்வில் தொடரும் சர்ச்சை
x
அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ஆயிரத்து 350 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது.முதல்கட்டமாக ஆயிரத்து 80 ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் குளறுபடிகள் நடைபெற்று வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் பட்டியல் பிரிவின் கீழ் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற ஒருவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவின் கீழ் இறுதி தேர்வு பட்டியலில் இடம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல் தற்போது தையல் ஆசிரியர் தேர்வில் பட்டியல் பொதுப்பிரிவின்கீழ் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற ஒருவர் இறுதிப்பட்டியலில் விதவை என்ற பிரிவின் கீழ் தேர்வு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கும் ஆசிரியர் நியமனத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்