கடலில் குளித்த 2 சிறுவர்கள் அலையில் சிக்கி பலி
பதிவு : நவம்பர் 07, 2018, 11:46 AM
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கடலில் குளித்த சிறுவர்கள் 2 பேர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கடலில் குளித்த சிறுவர்கள் 2 பேர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமணல் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ரீசா, ராயப்பன் ஆகியோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ராட்சத அலையில் சிக்கினர். இதனைக் கடற்கரையில் இருந்து பார்த்த மற்ற சிறுவர்கள், சத்தம் போட்டுள்ளனர்.அங்கு ஓடிவந்த பெரியவர்கள் கடலில் இறங்கி தேடி, சிறுவர்கள் இருவரையும் மீட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.