திருச்சி கொள்ளிடம் ஆற்றின் கரையோர மரங்கள் விழும் அபாயம்

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் விதிகளை மீறிஅளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதால், கரையோரத்தில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் கரையோர மரங்கள் விழும் அபாயம்
x
திருச்சி மாவட்டம் மாதவப்பெருமாள் ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 15 ஆண்டுகளாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.  அண்மையில் திருச்சி ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாட்டு வண்டுக்கு மட்டும் மணல் குவாரியாக அக்டோபர் 22 முதல் செயல்பட்டு வருகிறது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் தினசரி மணல் அள்ளிச் செல்லும் நிலையில் மணல் அள்ள ஒதுக்கீடு செய்து நடப்பட்ட எல்லைக் கல்லை அகற்றிவிட்டு கொள்ளிடம் ஆற்றின் கரையில் 10அடி ஆழத்திற்கு மணல் அள்ளுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் கரையோரம் உள்ள மரங்கள் வேறோடு விழும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே விதிகளை மீறி மணல் அள்ளுவதால் விரைவில் மணல் குவாரியை மூட உள்ளதாக பொதுப் பணித்துறை உதவிப் பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார். மணல் குவாரிகளில் நடக்கும்முறைகேடு பற்றி வருவாய் காவல் மற்றும் பொதுப் பணித்துறை உயரதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்