தற்காலிக பட்டாசு கடையில் தீ விபத்து
பதிவு : நவம்பர் 06, 2018, 03:55 PM
தீபாவளிக்காக திருச்சியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
திருச்சி உறையூர் வாலாஜா சாலையில் குமார் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக இந்த கடையில் தற்காலிக பட்டாசு பிரிவு அமைத்து பட்டாசுகள் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை வியாபாரத்தை முடித்து விட்டு கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி கொண்டிருந்த நேரத்தில் கடையில் திடீரென ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக கடையில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்துள்ளனர். தீ சிறிது நேரத்தில் கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்ததில் கடையில் இருந்த பட்டாசுகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைப், சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. கடையின் மேல் தளத்திற்கும் தீ பரவியதில் குடோனில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

293 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5364 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2942 views

பிற செய்திகள்

வசூல் போட்டியில் பேட்ட vs விஸ்வாசம்

போட்டி போட்டி வசூல் நிலவரத்தை அறிவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்

390 views

அரியர் தேர்வு நடைமுறைக்கு எதிரான வழக்கு

பிப்ரவரி 8-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

14 views

800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

வடமாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸ்...

23 views

"அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் வாழ்வில் விளையாடக்கூடாது" - ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகம் புதிய தேர்வு விதிகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவது நியாயமற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

15 views

அரசுப் பள்ளியில் மூன்றரை டன் விடைத்தாள்கள் மாயம்...

திருச்சி மாவட்டம் முசிறியில் அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் தேர்வு விடைத்தாள்கள் மாயமாகியுள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.