இலங்கையில் தஞ்சம் அடைந்த மீனவர்களால் தீபாவளி கொண்டாடாத குடும்பத்தினர்

இலங்கையில் தஞ்சம் அடைந்த மீனவர்கள் ஊர் திரும்பாததால், ராமேஸ்வரம் அருகே 2 குடும்பங்கள் தீபாவளி கொண்டாடாமல் சோகத்தில் உள்ளன​.
இலங்கையில் தஞ்சம் அடைந்த மீனவர்களால் தீபாவளி கொண்டாடாத குடும்பத்தினர்
x
ராமேஸ்வரம் சேராங்கோட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்த மகாராஜா மற்றும் வினோத் ஆகிய மீனவர்கள், கடந்த ஜூலை 14-இல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது  ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கிய 2 பேரும் 2 நாட்கள் கடலில் தத்தளித்து  திசைமாறி சென்று கச்சத்தீவில் இலங்கை கடற்படையிடம் தஞ்சமடைந்தாக கூறப்படுகிறது. இன்று வரை இலங்கை அரசு விடுவிக்காமல் 2  பேரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். அவர்களின் வருமானத்தை நம்பி வாழ்ந்து வந்த குடும்பத்தினர் தற்போது  2 பேரின்  நிலை குறித்து தெரியாததால்,  தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியவில்லை என கூறியுள்ளனர். 

மத்திய - மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு 2 பேரையும் மீட்டுத்தர வேண்டும் என்றும் உற​வினர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்கப்பட்ட  நிலையில் கடல் சீற்றம் காரணமாக வழிதவறிச் சென்ற 2 சிறுவர்களை விடுவிக்காமல் 4 மாதத்திற்கு மேலாக இலங்கையில் காலம் தாழ்த்தி வருவது மீனவர்களிடையே அதிருப்தியை உருவாக்கி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்