சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு : ஏரிகளில் குறைவான நீர் இருப்பு..!
பதிவு : நவம்பர் 06, 2018, 12:13 PM
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 15 நாட்களுக்கு தேவையான குடிநீரே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்காவிட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் ஏரியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. இந்த நீர் 15 நாட்களுக்கு தான் குடிநீர் வழங்க ஏதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 675 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 ஏரிகளில் நீர்மட்டம் பாதி அளவுக்கும் மேல் இருக்கும் நிலையில், நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

4 ஏரிகளில் அதன் முழுக் கொள்ளளவான 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடியில், தற்போது, ஆயிரத்து 758 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டு 2  ஆயிரத்து 114 மில்லியன் கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வீராணம் ஏரி, வேளாண் கிணறுகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையை அடுத்த 2 மாதங்களுக்கு சமாளிக்க முடியும் என்றும், இதே நிலை தொடர்ந்தால் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் வரை மழை இரவு நேரங்களில் மட்டும் பெய்தால் கூட இந்த ஏரிகளின் நீர்மட்டம் பாதியை தாண்டும் நிலையில், கோடை வரை குடிநீர் வழங்குவதில் சிக்கல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீராணத்தில் இருந்து நாள்தோறும் 165 மில்லியன் லிட்டரும் நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தலா 100 மில்லியன் லிட்டர் நீரும் சென்னை மாநகர் குடிநீர் தேவைக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள 22 குவாரிகளில் இருந்து நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கவும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஏரி, குளங்களில் இருந்து நாள்தோறும் 80 மில்லியன் லிட்டர் நீரை கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தேவைப்பட்டால் நெய்வேலி சுரங்கத்தில் இருந்து பல நூறு மில்லியன் கனஅடி நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெருநகர குடிநீர் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

243 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5305 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2915 views

பிற செய்திகள்

அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

6 views

பட்டத்து காளைக்கு படையலிட்டு வழிபாடு

தேனி மாவட்டம் கம்பத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பட்டத்து காளைக்கு மக்கள் படையலிட்டு வழிபட்டனர்.

4 views

நெருப்பில் மாடுகளை ஓட வைத்து பொங்கல் பண்டிகை

கர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

25 views

பொங்கலை நாய் சாப்பிட்டதால் 100வருடமாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

கடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம் குறித்த புதிய தகவல், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

392 views

"சுற்றுலா துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது" - அமைச்சர் துரைக்கண்ணு

பொங்கல் விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு

17 views

"ராகுல் பிரதமராக கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை" - தமிழிசை

"வலுவான கூட்டணி அமைக்கவே பாஜக முயற்சி" - தமிழிசை

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.