இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை - தென் தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை - தென் தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
x
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்து வரும் 24 மணி  தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, மேற்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து 8-ந் தேதிக்குள் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்