3 வயது குழந்தையை நரபலி கொடுத்த பெண் மந்திரவாதி கைது
பதிவு : நவம்பர் 05, 2018, 07:45 AM
மந்திர சக்தியை அதிகரிப்பதற்காக 3 வயது குழந்தையை நரபலி கொடுத்த பெண் மந்திரவாதியை கீரனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டியில் அக்டோபர் 26-ல், 3 வயது பெண் குழந்தை ஷாலினி, காட்டுப்பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண் மந்திரவாதியை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் தனக்கு மந்திர சக்தியை அதிகரிக்க சிறுமியை நரபலி கொடுத்ததை பெண் மந்திரவாதி ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து  அவரை கைது செய்த போலீசார், கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.